மகனை வெட்டிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை


மகனை வெட்டிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
x

மகனை வெட்டிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து ெபரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தேனி

மடிக்கணினியை இயக்குவது...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 48). இந்த தம்பதி்க்கு அழகுராஜா (18), சிவக்குமார் (20) என்ற மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி அழகுராஜாவுக்கும் அவரது அண்ணன் சிவக்குமாருக்கும் இடையே மடிக்கணினியை இயக்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது தாய் பேச்சியம்மாள் இருவரையும் கண்டித்துள்ளார்.

வெட்டி கொலை

அப்போது அழகுராஜா குச்சியால் பேச்சியம்மாளை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து அழகுராஜாவை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அழகுராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சியம்மாளை கைது செய்தனர்.

இந்த வழக்கு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சிங்கராஜ் குற்றம்சாட்டப்பட்ட பேச்சியம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மகனை அரிவாளால் வெட்டி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story