வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இளம் பெண் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் என்ற தங்கம் (வயது27). இவர் கடந்த 11- 4-2017 அன்று 21 வயது இளம்பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார்வாளகம் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் என்ற தங்கத்தை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தங்கராஜ் என்ற தங்கத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story