வாலிபருக்கு ஆயுள் தண்டனை


வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்துரை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). இவருடைய சித்தப்பா மாரியப்பன் (50). இவர்கள் 2 பேருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் செல்வம், மாரியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மாரியப்பனின் மனைவி ராமலட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கிறிஸ்டோபர் விசாரித்து செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story