பெயிண்டரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பெயிண்டரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

பெயிண்டரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி

பெயிண்டரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெயிண்டர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வயல்நெய்வேலி அரிசன தெருவை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் சுதர்சன் (வயது 25). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சுதர்சன் மற்றும் அவரது உறவினர்களான மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜகுரு என்கிற குரு (27), பால்ராஜ், சுரேஷ் ஆகியோர் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் வண்டி பாதையில் உள்ள சுடுகாடு அருகே மது அருந்திகொண்டிருந்தனர்.

பீர் பாட்டிலால் குத்தி கொலை

அப்போது சுதர்சன் தனது தங்கையிடம் பேசுவதை நிறுத்துமாறு ராஜகுருவை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்ஆத்திரம் அடைந்த ராஜகுரு பீர் பாட்டிலால் சுதர்சனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிவு ராஜகுரு உள்பட 3 பேரை கைது செய்தார்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ராஜகுருவை குற்றவாளி என அறிவித்து நீதிபதி ஜெயகுமார் தீர்ப்பு கூறினார். அதில், ராஜகுருவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதில் பால்ராஜ், சுரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story