விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடிய தியாகிகள் நினைவு ஜோதி தர்மபுரி வந்தது


விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடிய தியாகிகள் நினைவு ஜோதி தர்மபுரி வந்தது
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்க மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடிய தியாகிகள் நினைவு ஜோதி தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருச்சூருக்கு செல்கிறது. இந்த நினைவு ஜோதி குழுவினர் நேற்று தர்மபுரி வந்தனர். இந்த குழுவை வரவேற்கும் கூட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய நிதி செயலாளர் கிருஷ்ணபிரசாத், மத்தியகுழு உறுப்பினர்கள் சாகர், பிரகாசம், மாநில துணைத்தலைவர்கள் ரவீந்திரன், டில்லிபாபு, மாநில பொருளாளர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருச்சுணன், வஞ்சி, மல்லையன், முனியப்பன் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story