மின்விளக்குகள் அமைப்பு
செங்கம் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கம் நகரில் உள்ள மெயின் ரோட்டில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் உள்ளது. இந்த தடுப்புச்சுவரில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்களில் மோதி விபத்துகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரு ரோடு முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் மெயின் ரோட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
இந்த மின்விளக்கு ஒளியால் சாலையின் இருபுறமும் உள்ள கடை வியாபாரிகள், நடந்து செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் ஒளியில் நள்ளிரவு நேரத்தில் புதிய பஸ் நிலையம் செல்லும் மெயின் ரோடு பளிச்சென்று காட்சியளிக்கிறது.
Related Tags :
Next Story