ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இ-நாம் திட்டத்துடன் இணைப்பு


ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இ-நாம் திட்டத்துடன் இணைப்பு
x

சாத்தூர், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இ-நாம் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

விருதுநகர்


சாத்தூர், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இ-நாம் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

வேளாண்சந்தை

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்ட விற்பனை குழுவில் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேசிய வேளாண் சந்தையான இ-நாமுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விளைபொருள்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி விவசாயிகள் நிலையான விலை பெறவும், வியாபாரிகள் தரமான பொருட்களை தேர்வு செய்து கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒழுங்குப்படுத்திய சந்தை, வெளிப்படையான பரிவர்த்தனை, மின்னணு எடை, அதிக வியாபாரிகள் பங்கேற்பு, நியாயமான விலை கிடைப்பது போன்ற வசதிகளை பெற முடியும்.

கிட்டங்கி வசதி

மேலும் விளைபொருட்களை குறைந்த வாடகையில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதி, உலர் களம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதி ஆகியவற்றை விவசாயிகள் பெற்று பயனடையலாம்.

சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய விளை பொருட்களான மக்காச்சோளம், மிளகாய் வத்தல், நிலக்கடலை, பருத்தி, கொப்பரை, கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் விவசாய பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் அனைத்து விவசாயிகளும் இங்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story