தமிழ்நாட்டில் மதுவும், கஞ்சாவும் இளைஞர்களை சீரழிக்கிறது - அண்ணாமலை
தமிழ்நாட்டில் மதுவும் கஞ்சாவும் இளைஞர்களை சீரழிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை,
தமிழக பாஜக தலவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அண்ணாமலை, கட்டுகோப்பாக இருந்த தமிழ்நாட்டில் மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறையின் கையை கட்டிபோட்டு உள்ளார்கள். முன்பெல்லாம் போலீசார் லத்தியை வைத்து இரண்டு அடி அடிப்பார்கள். நான் கல்லூரி படிக்கும் போது போலீசார் அப்படி தான் இருந்தனர். அப்படி இருக்கும் போது தான் போலீசார் மீது பயம் இருந்தது.
மது மற்றும் போதை பொருள் கலாசாரத்தை ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள். அவ்வாறு ஒழிக்கவில்லை என்றால் இளைஞர்கள் வேறு சமுதாயம் வேறு என்ற நிலை வந்து விடும். காவல் துறைக்கு சில அதிகாரங்கள் கொடுக்க வேண்டும்' என்றார்.