மது பாட்டில்கள் விற்றவர் கைது
தியாகதுருகம் அருகே மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூளாங்குறிச்சி டாஸ்மாக் அருகே உள்ள கரும்புதோட்டத்தில் மது பாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனா். விசாரணையில், கள்ளக்குறிச்சி அருகே மோகூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 53) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 88 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார், ரிஷிவந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள கடையில் வைத்து மதுபாட்டில்கள் விற்ற அதேபகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வம் என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, அவரது கடையில் இருந்த 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற செல்வத்தை தேடி வருகின்றனர்.