டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
x

களக்காடு அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வி.கே.நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவில் பணி முடிந்ததும் 3 பேரும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 64 மது பாட்டில்களை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி கடையின் மேற்பார்வையாளர் சுத்தமல்லியை சேர்ந்த முரளி (வயது 52), களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.


Next Story