சாராய வியாபாரி கைது
விழுப்புரத்தில் சாராய வியாபாரி கைது
விழுப்புரம்
புதுச்சேரி மாநிலம் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற ஆண்டியார்பாளையம் ராஜா(வயது 40). பிரபல சாராய வியாபாரியான இவர், புதுச்சேரி மாநிலத்தில் 8 சாராய கடைகளை நடத்தி வருகிறார். அந்த கடைகளில் இருந்து சாராயத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் 20 சாராய வழக்குகளும, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 சாராய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2021-ல் விழுப்புரம் பகுதிக்கு சாராயம் கடத்தி வந்த ஆண்டியார்பாளையம் ராஜாவின் கூட்டாளியான புதுச்சேரியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜா தலைமறைவாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பகுதிக்கு சாராயம் கடத்தி வந்த ராஜாவை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.