குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் காமராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 43). சாராயம் கடத்தல், மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக திருக்கண்ணபுரம், நாகூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் குண்டர் சட்டத்தில் ஜெயமுருகனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயமுருகனை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story