தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

விழுப்புரம்

விழுப்புரம்

திண்டிவனம் அருகே ரோஷணை பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் என்கிற கிடங்களான். இவர் மீது சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் சரண்ராஜ் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரது குற்றசெயலை தடுக்கும் வகையில் அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் சரண்ராஜை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story