தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அடசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் சிங்காரம் (வயது 42). இவர் மீது பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் சிங்காரத்தை திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் சாராயம் விற்பனை செய்து வந்ததால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிங்காரத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிங்காரத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story