சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை


சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை
x

சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

பாலியல் தொல்லை

அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 32). சாராய வியாபாரி. இவர் கடந்த 11.8.2021 அன்று, ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து 1098 எண்ணில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதேபோல் இந்த சம்பவத்திற்கு 6 மாதத்திற்கு முன்பும் அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

11 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். இதில், பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ராஜசேகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதமும், வீட்டில் அத்துமீறி புகுந்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜசேகரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச் சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story