துவார் பிடாரி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா


துவார் பிடாரி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
x

துவார் பிடாரி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே துவாா் கிராமத்தில் பிடாாி அம்மன், முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மண்டகபடிதாரா் சார்பில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி விழா, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் துவாா், கெண்டையன்பட்டி, குளவாய்பட்டி, பெத்தாரிப்பட்டி, ஆண்டி குளப்பெண்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் இல்லங்களில் குடங்களை அலங்கரித்து அதில் தென்னம் பாலைகளை வைத்து தலையில் சுமந்து கும்மி பாட்டுகள் பாடியபடி ஊா்வலமாக வந்தனா். இதில் திருநங்கைகளும் கலந்து கொண்டு மதுகுடங்களை ஏந்தி பாட்டு பாடி கும்மியடித்தது பக்தா்களை கவா்ந்தது. பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி பிடாரி அம்மன் கோவிலை வந்தடைந்து சுவாமியை வழிபட்டனா். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மழையூர் போலீசார் செய்திருந்தனா்.


Next Story