தீபாவளியையொட்டி ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை


தீபாவளியையொட்டி ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை
x

தீபாவளியையொட்டி ரூ.14¾ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

பெரம்பலூர்

மது விற்பனை

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை டாஸ்மாக் கடைகளில் ரூ.14 கோடியே 86 லட்சத்து 40 ஆயிரத்து 240-க்கு மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த 21-ந்தேதி அயல்நாட்டு இந்திய தயாரிப்பு மதுபான ரகங்கள் ரூ.2 கோடியே 14 லட்சத்து 36 ஆயிரத்து 190-க்கும், பீர் ரகங்கள் ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 780 உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 42 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

தீபாவளியன்று...

22-ந்தேதி மதுபானங்கள் மற்றும் பீர் ரூ.2 கோடியே 74 லட்சத்திற்கும், 23-ந்தேதி மதுபானங்கள் மற்றும் பீர் ரூ.4 கோடியே 67 லட்சத்திற்கும், தீபாவளியான நேற்று முன்தினம் மதுபானங்கள் மற்றும் பீர் ரூ.5 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 270-க்கும் விற்பனை ஆனது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story