தீபாவளியன்று ரூ.7 ½ கோடிக்கு மதுபானம் விற்பனை
தீபாவளியன்று ரூ.7 ½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகி உள்ளது.
திருவண்ணாமலை
தீபாவளியன்று ரூ.7 ½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகி உள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த 24-ந் தேதி கொண்டாடப்பட்டது. மது பிரியர்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 216 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபான விற்பனை நடைபெறும். ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. இதில் 8 ஆயிரத்து 79 பெட்டி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், 10 ஆயிரத்து 637 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.7 கோடியே 62 லட்சத்து87 ஆயிரத்து 920 வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story