சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் உள்பட போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பச்சூர் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பச்சூர் அருகே சாமு கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (வயது 56) என்பவர் வீட்டின் பின்புறத்தில் மறைவாக வைத்து கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை ைகது செய்தனர். அவரிடமிருந்து 11 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.பின்னர் சிவராஜை போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story