சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சாராயம்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
பெரம்பலூரை அடுத்த எசனை மலையடிவாரம் அருகே சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி மற்றும் குழுவினர் எசனை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எசனை மலையடிவாரம் அருகே, வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 47) என்பவர் சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்த போலீசார், சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மேலும் இதுபோன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் மாவட்ட போலீஸ் அலுவலக செல்போன் எண் 9498100690-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.