பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது


பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பகுதியில் பெட்டிகடை மற்றும் பொது இடங்களில் மது கடைகளில் மது வாங்கி, பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சாத்தான்குளம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சடையன்கிணறு விலக்கில் பெட்டிக்கடை நடத்தி வரும் சடையன்கிணறு மாலை மகன் வள்ளிநாயகம் (28) என்பவர் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அவர் அரசு மது பானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story