மது விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது


மது விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 July 2023 12:00 AM IST (Updated: 20 July 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). இவர் கடந்த 30-ந் தேதி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் வெளியே வந்தால் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலெட்சுமி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆணையிட்டதின் அடிப்படையில் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.


Next Story