சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்


சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் (எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3a, எப்.எல்3aa, எப்.எல்11) அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். நாளை மறுநாள் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் குற்றமாகும். இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.





Next Story