"டாஸ்மாக்கில் கூடுதல் விலை" - ஊழியர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை


டாஸ்மாக்கில் கூடுதல் விலை - ஊழியர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 May 2023 4:41 PM IST (Updated: 26 May 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்

சென்னை,

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 முதல் இரவு 10 வரை மட்டுமே இயங்க வேண்டும் . மதுபான விலைப்பட்டியலை, வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில், கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும். மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. விதிமீறல்கள் இருந்தால், அபராதம் வசூலித்து, அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். என அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.





Next Story