சாராயம் கடத்தல் புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் கைது


சாராயம் கடத்தல் புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே சாராயம் கடத்தல் புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் கைது

விழுப்புரம்

மயிலம்

மயிலம் அருகே கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகே மயிலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தபோது அதில் இருந்த மூட்டைகளில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம் சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த எட்டியப்பன் மகன் சுரேஷ்(வயது 31), அதே பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் வடிவேல்(40) என்பதும் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story