புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு கூட்டம்
அரசு பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதுார் திருவெற்றியூர் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞா் மாரிக்குட்டி தலைமை தாங்கி, கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் உண்டாகும் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார். உதவி ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். முடிவில் எழுத்தறிவு திட்ட ஆசிரியை சுமிதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story