தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி


தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3-ம் பருவத்திற்கான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 92 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் 118 பேர் கலந்து கொண்டனர்.இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை எவ்வாறு கற்பிக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியை திருவாரூர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சவுந்தர்ராஜன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் முதுநிலை விரிவுரையாளருமான வசந்தி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன், வளமைய மேற்பார்வையாளர்சத்யா, ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story