மதுபானம் விற்ற முதியவர் கைது
சாணார்பட்டி அருகே, மதுபானம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுக்கடையில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த கோபால்பட்டியை சேர்ந்த ரவீந்திரன் (வயது 67) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 57 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அஞ்சுகுழிப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும், அந்த பகுதியில் மதுபானம் விற்று கொண்டிருந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அங்கிருந்த 893 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், குணசேகரன், மணி, சோழகுளத்துபட்டியை சேர்ந்த சின்னராஜ் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.