வருடந்தோறும் இலக்கிய திருவிழா நடத்த வேண்டும்


வருடந்தோறும் இலக்கிய திருவிழா நடத்த வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருடந்தோறும் இலக்கிய திருவிழா நடத்த வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

திருப்பத்தூர்

வருடந்தோறும்...

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை இணைந்துநடத்திய புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இரண்டாவது இலக்கிய திருவிழா நிறைவு நிகழ்ச்சி தூயநெஞ்ச கல்லூரியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். கவிஞர் சல்மா கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் அதிக புத்தகங்கள் வாங்கியவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருடம் தோறும் இலக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. அதைப்போல் நமது திருப்பத்தூர் மாவட்டத்திலும் இலக்கிய திருவிழா நடத்தப்பட வேண்டும். இந்த இலக்கிய திருவிழாவில் 48 எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

அனைத்து மக்களும்

அடுத்த ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் திரளாக கலந்து கொண்டு இலக்கிய திருவிழாவை சிறப்பிக்க வேண்டும் என கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிராஜ், போராசிரியர் பார்த்திபராஜா, பதிப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் தான் எழுதிய கவிதையை விழா மேடையில் வாசித்தார். மேலும் அடுத்த பத்து வருடங்களில் புத்தகம் எழுதி இதே புத்தகக் கண்காட்சியில் இடம்பெற வைப்பேன் என தெரிவித்தார்.


Next Story