அரசு பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடக்கம்
அரசு பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி இலக்கிய மன்றங்களை தொடங்கி வைத்து மன்ற செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களின் பன்முகத் திறன்கள், நுண்ணறிவு, ஆளுமைப்பண்புகள் மற்றும் களைத்திறன்கள் வளர்வதை குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் உயர்நிலை உதவி ஆசிரியர் பைரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கமலாசாந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story