மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி


மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே திப்பனம்பட்டி பஞ்சாயத்து, திப்மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது ஒரே மகள் காவியசீதா (வயது 4). இவள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். அவளை கீழப்பாவூர் மற்றும் தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் அங்கிருந்து சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே காவியசீதா இறந்து விட்டாள். இதையடுத்து திப்பனம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story