பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி
தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
திண்டுக்கல்
தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, பல்லி சகுனம் கேட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்கான பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் சன்னதியில் நடைபெறுகிறது.
இதில் பக்தர்கள், சுற்றுப்புற கிராம நாட்டாண்மைகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து, பரம்பரை அறங்காவலர்கள் தொழில் அதிபர் மேகநாதன், ஆசிரியர் செந்தில் முத்துக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story