அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்
x

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அரசுக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்து போக செய்தது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசு பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இருசக்கர வாகன திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் தற்போது அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவு எடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தியை பார்க்கும்போது, 'அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்' என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை குறையும் நிலை உருவாகும் என்றும், இது ஒரு சங்கிலித்தொடர் போல் மேல்நிலை வகுப்பு வரை செல்லும் நிலை உருவாகும் என்றும், இது அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கும் என்றும், பொது மக்களும், கல்வியாளர்களும் கருதுகிறார்கள்.

சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்

இது கல்வியை வியாபாரமாக ஆக்குவதற்கு சமம். இதனை அரசு ஊக்குவிக்க நினைப்பது என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான நியாயமற்ற செயல். எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, முன்பு இருந்ததை போலவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

இதேபோல், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தமிழக அரசு மீண்டும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story