எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 30-ந் தேதி கடைசி நாள்


எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 30-ந் தேதி கடைசி நாள்
x

எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 2 ஆண்டு எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஓம்மென் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்க முடியும் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணி என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.


Next Story