ஸ்ரீவைகுண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்


ஸ்ரீவைகுண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
x

ஸ்ரீவைகுண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமை தூக்கும் வேலையை ஒப்பந்தத்திற்கு விடக்கூடாது, பொது விநியோக துறையை கூட்டுறவு துறைக்கு மாற்றக் கூடாது, 2018- ல் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின் படி தற்காலிக சுமை பணியாளருக்கு வருகை பதிவேடு அமலுக்கு கொண்டு வந்து நேரடியாக கூலி கொடுக்க வேண்டும். சுமை தூக்குபவர்களின் கூலியில் பங்கு கேட்க கூடாது, 2022-ல் வழங்க வேண்டிய கூலி உயர்வை உடன வழஙக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஸ்ரீவைகுண்டம் குடோன் ஏ.ஐ.சி.சி.டி.யு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பிச்சாண்டி, ஒண்டிவீரன், முருகன், சின்னத்துரை, இசக்கிமுத்து, சீனித்துரை, சுரேஷ், தங்கதுரை, அய்யாகுட்டி, எல்.பி.எப்.சுமைதூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, சுடலைமுத்து போல் பாண்டி மற்றும் ஏரல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வண்ணமுத்து, வள்ளிக்கண்ணன், ஆறுமுகம், லட்சுமணன், முனியசாமி, பெரியசாமி, பக்குள்ராஜ், செல்வகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story