பொக்லின் எந்திரம் மோதி சுமைதூக்கும் தொழிலாளி சாவு


பொக்லின் எந்திரம் மோதி சுமைதூக்கும் தொழிலாளி சாவு
x

வேதாரண்யம் அருகே பொக்லின் எந்திரம் மோதி சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி பணி முடிந்து வெள்ளப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லின் எந்திரம் எதிர்பாராதவிதமாக சிவமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவமணி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேட்டைகாரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story