மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.11 லட்சத்தில் கடன் உதவிகள்
மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.11 லட்சத்தில் கடன் உதவிகள்
திருவாரூரில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் கடன் உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல சாதனை படைத்திட வேண்டும்
தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில் கிராமப்புற மகளிரை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் பல சாதனை படைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடன் உதவி
முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் 21 மகளிர் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு கடனுதவியும், திருவாரூர் விடியல்ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பிணை வைப்பு மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார். இதில் ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வடிவேல், மாவட்டதொழில் மைய பொதுமேலாளர் ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.