மகளிர் குழுக்களுக்கு ரூ.43 லட்சம் கடன் உதவி
மகளிர் குழுக்களுக்கு ரூ.43 லட்சம் கடன் உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.குலோத்துங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார். கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.தசரதன், துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 43 மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.43 லட்சம் கடன் உதவி வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மோகன் குமார், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் தெய்வகுமார் நன்றி கூறினார்.