அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் கடன் உதவி


அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் கடன் உதவி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்-;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வணிக சாம்பியன்ஸ் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதியத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் போது ் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டு மொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கும்.

சேவைத் தொழில்கள்

எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும் 6 சதவீத வட்டிமானியமும் வழங்கப்படும்.இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவைத் தொழில்கள் மற்றும் உற்பத்தி ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள வழிவகை இல்லை. விண்ணப்பிக்க கல்வி தகுதி தேவையில்லை. வயது வரம்பு 55 வரை ஆகும்.

விண்ணப்பிக்கலாம்

புதிய மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் கடன் வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணினி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் மானியத்துடன் கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story