மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்
x

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடன் ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூட்டு றவுத்துறை மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி பேசினார். இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் ஆறுமுகம், சிந்து முருகன், நகராட்சி தலைவர் ரவிகண்ணன், துணை தலைவர் செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் வீரபாண்டி நன்றி கூறினார்.


Next Story