ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!


ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
x
தினத்தந்தி 1 Aug 2023 4:16 PM IST (Updated: 1 Aug 2023 4:34 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு வரும் 3-ம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


Next Story