திருச்செந்தூர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல் சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல் தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் நாளை(வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, பரமன்குறிச்சி மெயின்ரோடு, சங்கிவிளை, தேரிகுடியிருப்பு, பூச்சிக்காடு, காயாமொழி, மேலகானம், செங்குழி, தைக்காவூர், நைனார்பத்து, சீர்காட்சி, காயல்பட்டினம், அருணாச்சலபுரம், கொம்புத்துறை, சிங்கித் துறை, சுப்ரமணியபுரம் தெற்கு, முத்துசாமிபுரம், நாலுமாவடி, பணிக்கநாடார்குடியிருப்பு, தோப்புவளம் ரோடு, தச்சமொழி, கொம்பன்குளம், பேய்க்குளம், உடையார்குளம், செம்பூர், தவசிநகர், மணல்குண்டு, மாணாட்டூர், ஆதிநாதபுரம், நங்கைமொழி, வாணியங்காவிளை, ராமசுப்ரமணியபுரம், உடன்குடி சிதம்பர தெரு, காலன்குடியிருப்பு, சிவல்விளைபுதூர், செட்டியாபத்து, உசரத்துக்குடியிருப்பு, தோப்புவிளை, பெரியதாழை, செட்டிவிளை புத்தன்தருவை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.