தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தனலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ராஜகோபால்நகர் பக்கிள் ஓடை அருகே இடையூறாக உள்ள மின்மாற்றியை மாற்றி அமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் மில்லர்புரம், பால்பாண்டிநகர், ராஜீவ்நகர், அண்ணாநகர் 2, 3-வது தெரு, டி.எம்.பி. காலனி 4, 5-வது தெரு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story