சமூக விரோத செயல்களை தடுக்க மயானத்துக்கு பூட்டு
சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள மயானத்துக்கு பூட்டு போடப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மின்மயானம் அருகே கோவிந்தாபுரம் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தின் இருபக்கங்களிலும் கேட் இருக்கிறது. இந்த மயானத்தின் 2 கேட்களும் திறந்து கிடப்பது வழக்கம். இதனால் பட்டப்பகலில் மயானத்துக்குள் அமர்ந்து மது குடிப்பதாக புகார் எழுந்தது. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியது. இதற்கிடையே ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை சிலர் இரவு நேரத்தில் மயானத்தில் கொட்டி செல்கின்றனர்.
இதனால் கோவிந்தாபுரம் மயானம் குப்பை கிடங்காக மாறியது. இதையடுத்து சமூக விரோத செயல்களை தடுக்கவும், குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் மயானத்தின் கேட்டை பூட்டினர். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மட்டுமே மயானம் திறக்கும்படி ஊழியர்களிடம் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story