கிணற்றுக்குள் பாய்ந்த லாரி
வெள்ளகோவில் வள்ளியரச்சல் ரோடு டி.ஆர்.நகர் பகுதியில் பி.எஸ்.மணி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 40 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றை பயன்படுத்தாமல் இருப்பதால், இந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுத்தனர். அதற்காக நேற்று வெள்ளகோவில், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது50) என்பவருக்கு சொந்தமான லாரியில் பழைய குப்பை மற்றும் கற்கள் மண் ஆகியவற்றை கொண்டு வந்து கிணற்றில் கொட்டினர். ஆனந்தன் கிணற்றில் மண்ணை கொட்ட லாரியை பின்னோக்கி சென்ற போது திடீரென லாரி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. சுதாரித்துக்கொண்ட லாரியை ஓட்டி வந்த ஆனந்தன் அதிர்ஷ்டவசமாக கிணற்றின் சுவற்றை பிடித்து மேலேறி வந்து விட்டார். இவருக்கு காயம் ஏதும் இல்லை. உடனே இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத்துறையினர் வந்து கிரேன் மூலம் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை வெளியே எடுத்தனர்.