நின்ற லாரியில் தீப்பிடித்தது


நின்ற லாரியில் தீப்பிடித்தது
x
திருப்பூர்

நின்ற லாரியில் தீப்பிடித்ததுநின்ற லாரியில் தீப்பிடித்தது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், (வயது 40) சரக்கு லாரி டிரைவர். நேற்று முன்தினம் அவர் நாமக்கல்லில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு திருப்பூர் சென்று பொருட்களை இறக்கி விட்டு பின்னர் பல்லடம் வழியாக பொள்ளாச்சி செல்வதற்காக வந்தார். பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி செல்லும் சாலையோரம் சரக்கு லாரியை நிறுத்தி விட்டு அதன் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் டிரைவர்கள் ஓய்வு அறையில் இரவு தங்கினார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த சரக்கு லாரியின் பின்புறம் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரியின் பின் பகுதி முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரியின் டீசல் டேங்க் தீப்பிடிக்கும் முன் தீயணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டீசல் டேங்க் வெடித்து இருந்தால் அருகில் பெட்ரோல் பங்கு உள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story