தொப்பூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற பஞ்சு லோடு சாலையில் சரிந்தது


தொப்பூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற பஞ்சு லோடு சாலையில் சரிந்தது
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

மராட்டிய மாநிலம் நாக்பூரியில் இருந்து பஞ்சுபேல் லோடுகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த மணவாளன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். அதே பகுதியை சேர்ந்த முரளி (32) மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்த லாரி தொப்பூர் அருகே வெள்ளக்கல் கூட்ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென பஞ்சுபேல் லோடு, லாரி பாடியுடன் சாலையில் சரிந்தது. இதனால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் பொலீசார் அங்கு விரைந்து சென்று, சாலையில் சரிந்த பஞ்சுபேல் லோடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story