நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை


நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நிதி நிறுவனம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார். அப்போது தனது நிதி நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.2 லட்சம் கொள்ளை

இதையடுத்து நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் நிதி நிறுவனத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story