சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. புராண காலத்தில் 4 வேதங்களும் பூஜை செய்தும், மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப்பதிகங்கள் பாடி திறந்ததாகவும் வரலாறு இக்கோவிலுக்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாண வரணி ஆதீனம், செவ்வந்திநாத பண்டார சன்னதி, கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story