தஞ்சையில் லாரி கவிழ்ந்ததால் சாலையில் கொட்டிய நிலக்கரி
தஞ்சையில் லாரி கவிழ்ந்தால் சாலையில் நிலக்கரி கொட்டியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சையில் லாரி கவிழ்ந்தால் சாலையில் நிலக்கரி கொட்டியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி
தஞ்சை- திருச்சி சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டுசென்று கொண்டு இருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தர் (வயது 47) ஓட்டிச்சென்றார். லாரி தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது.இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. மேலும் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.மேலும் அவர் மயக்க நிலையில் இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென் காயம் அடைந்த மோகனசுந்தரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
சாலையிலேயே லாரி கவிழ்ந்தால் அந்த பகுதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்தையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.